Janu / 2026 மார்ச் 15 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரை பகுதியில் சுமார் 25 அடி நீளம் கொண்ட பாரிய மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (13) குறித்த மர்மப்பொருள் கடல் அலையினால் அடித்து வரப்பட்டு கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 25 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட இந்த பொருள், வலுவான 'ரெஜின்' (Resin) மூலப்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இது கப்பல்கள் தரை தட்டும் போது அல்லது துறைமுக முனையங்களில் மோதும் போது ஏற்படும் அதிர்வுகளை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை பாதுகாப்பு தடுப்பு (Fender) ஆக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கணிக்கப்பட்டுள்ளது.
கரையொதுங்கியுள்ள மர்மப்பொருள் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், கடற்கரையில் காணப்படும் இந்தப் பாரிய பொருளைக் காண்பதற்காக பொதுமக்கள் திரளாக கூடி வருகின்றனர்.

8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago