R.Tharaniya / 2025 ஜூலை 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்பு களில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (23) அன்று மாலை திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது.இதனை திருகோணமலை நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நினைவேந்தலை ஈகை சுடரேற்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தினர். இதன் போது இதில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
1983 களில் தமிழர்களுடைய வாழ்வியலை அளித்த ஜூலை கலவரம் தமிழர்களுடைய பரப்பில் காணப்படுகிறது. தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்களுடைய வாழ்வை அலங்கோலமாக்கி அலைந்து திரிந்து உடமைகளை உயிரை இழந்து புலம்பெயர் தேசங்களுக்கு கூடுதலான தமிழர்கள் இடம் பெயர்ந்து
தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து அல்லோல கல்லோலப்பட்ட நாள் ஒன்றினை இன்னுமொரு யுகத்துக்கும் சந்ததிக்கும் நினைவுபடுத்தி கடத்திச் செல்கின்ற அந்த நிகழ்வை திருகோணமலையில் இங்கு செய்கின்றோம்
இந்த நாள் தமிழர்களுடைய ஒரு கரி நாளாக தமிழர்களுடைய வாழ்வில் இனப்படுகொலையின் ஆரம்ப நாளாக இதனை பார்க்கின்றோம் தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன ஜூலை 23 தொடங்கிய கலவரம் அதற்கு பின்னர் பல்வேறு நாட்கள் இடம் பெற்று தமிழர்களை சிதலம் சிதலமாக பாலம் பாலமாக அவர்களுடைய பண்பாட்டியலையும் வாழ்வியலையும் கூறு போட்ட நிகழ்வாக திருகோணமலை நண்பர்கள் வட்டம் சார்பாக நினைவு கூறுகிறோம்.

ஏ.எச் ஹஸ்பர்
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago