2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

கல்குடாவில் பத்து பரல் கசிப்புடன் சந்தேக நபர் கைது

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை கிண்ணையடி பிரம்படி தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு தடையாக இருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவுபொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பயனாக கிண்ணையடி பிரம்படித்தீவு ஆற்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து பரல்களில்இருந்து ஆயிரத்தி அறுநூற்று என்பத்தைந்து (1685) லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கசிப்பு உற்பத்தி உடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .