2025 ஜூலை 03, வியாழக்கிழமை

’கல்முனையில் 95 சதவீதமானவை டெல்டா’

Niroshini   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன், வி.ரி.சகாதேவராஜா, எம்.எஸ்.எம்.ஹனீபா

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை மாதிரிகளில், 95 சதவீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கடந்த 4ஆம் திகதியன்று கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், ஸ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றார்.

18 பிசிஆர் மாதிரிகளில், 17 பிசிஆர் மாதிரிகள் கொரோனா டெல்டா வைரஸ் தொற்றுக்கும் ஒரு பிசிஆர் பரிசோதனை மாதிரி கொரோனா அல்பா வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .