R.Tharaniya / 2025 ஜூலை 28 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை: சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமங்களபுர பகுதியில், வயல்வெளியை ஒட்டிய காட்டுப் பகுதியிலிருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று திங்கட்கிழமை (28) அன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சேருநுவர காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானை சுமார் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனை உறுதி செய்வதற்காக, யானையின் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.
பரிசோதனையின் முடிவு களுக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள மக்களிடமும் வன அதிகாரிகளிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எப்.முபாரக்
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago