R.Tharaniya / 2025 மார்ச் 19 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டு யானைகளிடம் இருந்து தங்களின் உயிர்களையும் உடமைகளை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் புதன்கிழமை (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்படிச்சேனை கிராம உத்தியோகத்தர் அலுவலகம் முன் வீதியோரத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி இலுப்படிச்சேனைபிரதான வீதி வழியாக இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்று இலுப்படிச்சேனை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுயானை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் அரசே கவனம் எடு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகரிகளே!எங்களுக்கு தீர்வைப் பெற்றுத்தா ? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சுமார் 1 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கலடி பதுளை வீதியை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளினால் சொத்துக்கள் அழிக்கப்ட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் உயிர் ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை (18) இரவு பலர் சேனை கிராமத்துக்குள் புகுந்த யானை தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளது. கடந்த வாரம் சின்ன புல்லுமலை கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை உடைத்துமுற்றாக சேதமாகியுள்ளன.
காட்டு யானைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பல முறை முறைப்பாடுகள் செய்த போதிலும் இது வரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பேரின்பராஜா சபேஷ்




1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago