R.Tharaniya / 2025 ஜூலை 31 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை மாவடிவேம்பு எல்லைப் பகுதியில் குடியிருப்பு பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (29) அன்று இரவு காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன.
பொது மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் வியாழக்கிழமை(31) அன்று சம்பவம் இடத்திற்கு விரைந்த ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இதுவரை காலமாக யானைகளை துரத்தும் வெடிகளோ மற்றும் யானைக்கான எல்லை வேலிகளோ இப்பகுதிக்கு அமைக்கப்படவில்லை எனவும்இதனால் ஒவ்வொரு இரவினையும் அச்சத்துடனும் தூக்கமில்லாமல் தங்களது பிள்ளைகளை காப்பாற்றும் முகமாக மிகவும் துன்பப்படுவதாக தெரிவித்ததோடு இது தொடர்பில் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago