Janu / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.
காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய ஒருங்கிணைப்பாளர் யதுஷியா முரளியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
காணமல்போனவர்களின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தில் இருந்து வருகை தந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அர்பா தாஷிம் உள்ளிட்டவர்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், செங்கலடி - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 66 பேருடைய உறவினர்களினால் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எம். எஸ். எம். நூர்தீன்

1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago