Editorial / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று (25) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரின் வீட்டை காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் (25) வெள்ளிக்கிழமை மேற் கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த நபருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸார் குறித்த நபரின் வீட்டுக்கு சென்று வீட்டிலிருந்து அவரது குடும்ப உறவினர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு அவரின் குடும்ப உறவினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago