2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது

Janu   / 2023 நவம்பர் 27 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேரை 120 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 3 மணியளவில் காத்தான்குடியில் கராச் ஒன்றின் முதலாளியும் போதைப்பொருள் வியாபாரியை 10 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசணையைடுத்து, பிரதான வியாபாரியான காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரையும் அவரது உதவியாளர் உட்பட இருவரையும் பகல் 12 மணியளவில் காத்தான்குடியில் உள்ள வீதியொன்றில் வைத்து மடக்கி பிடித்தனர். அதில் ஒருவரிடமிருந்து 72 கிராமும் உதவியாளரிடமிருந்து 13 கிராம் உட்பட 85 கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வவுனியாவைச் சேர்ந்த இளம் பொலிஸ் கான்ஸடபில் ஒருவரையும் 25 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X