R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தியூடாக பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் சனிக்கிழமை (23) அன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது குறித்த விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த குடும்பமொன்று கொழும்பு விமான நிலையம் சென்று மீண்டும் ஆரையம்பதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் பயணம் செய்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி முருகன் ஆலய கிணற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த போது காரில் 4 பேர் பயணித்தது டன் 7 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளடங்குகிறது.
காயமடைந்தவர்கள் வீதியால் பயணித்தவர்களின் மூலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7 மாத கைக்குழந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .