Janu / 2025 ஜூன் 17 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவு நகர சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
மொத்தமாக 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 04 உறுப்பினர்களும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் தலா ஒருவரும் அடங்குவர் .
ஏ.எச் ஹஸ்பர்,எஸ்.கீதபொன்கலன்

2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago