2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்  

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு,மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (17) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கான அனர்த்த அழிவுகளின் போதான நடவடிக்கைகளை இதுவரைக்கும் எவரும் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவில்லை இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவே நியாயமான தீர்வை பெற்றுத் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் 7100 ஏக்கருக்கு ஏக்கர் வரிப்பணம் செலுத்தியுள்ளோம். இதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடுகள் கிடைத்தன தற்போது மாத்திரம் தாங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியதோடு பதாகைகளை ஏந்தியவாறு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியை சந்தித்து கலந்துரையாடினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X