Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.ரி.சகாதேவராஜா, ஏ.எம்.ஏ.பரீட், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், நேற்று (12), வீதியில் திரிந்த 17 பேருக்கு மேற்கொண்ட அன்;டிஜன் பரிசோதனையில், மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் 20 பேரின் பிசிஆர் மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
எனவே, அத்தியவசிய தேவை தவிர வெளியில் வர வேண்டாம் என, பொதுமக்களை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வசீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர எம்.எச்.எம்..றிஸ்வி; தலைமையில், ஆலங்கேணி பகுதியில, நேற்று (12), வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 35 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன பரிசோதனையில், ஐவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு நகரில், இன்று (13) ஊரடங்குச் சட்;டத்தை மீறி, வீதிகளில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை மேறகொள்ளப்பட்டதாக, கோட்டடைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - பார் வீதி உட்பட பல இடங்களில், பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜின் ஏற்பாட்டில், இந்த நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago