2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் 30 வயதுடைய போதை வியாபாரியான இளைஞர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (28)அன்று பிற்பகல் மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்..பி. ரத்நாயக்கவின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் குழுவினர் மாவட்ட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (28) அன்று பிற்பகல் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதைப்பொருள் வியாபாரி சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளும் போதை பொருள் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய இளைஞர் என்று நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும்  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டன் இவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்  .ரீ.எல்.ஜவ்பர்கான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X