Princiya Dixci / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு நேற்று வரை 1,017 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட 131 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே, கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.
அத்துடன், காத்தான்குடியிலும் திடீரென 15 பேராக தொற்று அதிகரித்துள்ளது.
இறுதியாக காத்தான்குடியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பலியாகிள்ளார். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணமாகவும் கிழக்கு மாகாணத்தில் 5ஆவது மரணமாகவும் உள்ளது.
இதுவரை சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, காத்தான்குடியில் என 5 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
கிழக்கில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கூடிய 08 பேர் காத்தான்குடியிலும் அடுத்ததாக மூதூர் மற்றும் பொத்துவில் தலா 06 பேரும் அட்டாளைச்சேனையில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago