2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநர் தாய்லாந்து விஜயம்

Freelancer   / 2023 நவம்பர் 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

தாய்லாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான  செந்தில் தொண்டமானுக்கும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கொர்ன் டபரன்சிக்கும் இடையில் இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டெழ தாய்லாந்து முழு ஆதரவையும் வழங்கும் என கொர்ன் டபரன்சி கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்தார். 

தாய்லாந்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது அந்நாட்டை மீட்டெடுக்க சுற்றுலா துறை முக்கிய பங்களித்தது என   முன்னாள் பிரதமர் கொர்ன் டபரன்சி தெரிவித்ததோடு, தாய்லாந்தில் சுற்றுலா துறையில் காணப்படும் வெற்றிக்கான கொள்கை குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் தனக்கும் காணப்படும் நீண்ட கால நட்பு குறித்தும் நினைவூட்டிய,முன்னாள் பிரதமர் கொர்ன் டபரன்சியை இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பை ஏற்று  எதிர்வரும்   பெப்ரவரி மாதம் தாம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தாய்லாந்து முன்னாள் பிரதமர் ,கிழக்கு மாகாண ஆளுநரிடம்  உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   M


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X