2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை  பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர் ஆப்தீன் தலைமையிலான  பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்குச் சென்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த 9 கிராமும் 610 மில்லிகிராம் கஞ்சாவையும், இருவரும்  பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(28)அன்று ஆஜர்படுத்திய போது நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

றிபாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X