2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

கைதி நீதிமன்ற மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு- ஏறாவூர் சுற்றுலா  நீதவான் நீதிமன்ற மலசல கூடத்தில் சிறைக்கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று .வெள்ளிக்கிழமை (26) அன்று பதிவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் தன் வசம் வைத்திருந்தமை மற்றும் களவு தொடர்பாக அவருக்கெதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு; விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் வெள்ளிக்கிழமை (26) அன்று  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளின் பிரகாரம் குறித்த நபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சிறைச்சாலை மலசல கூடத்திற்கு சென்ற நபர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அணிந்திருந்த சாரனின் ஒரு பகுதியை கிழித்து ஜன்னலில் கட்டி மற்றைய பகுதியை கழுத்தில் கட்டி தொங்கிய நிலையில்  சடலம் காணப்பட்டது.

மலசல கூடத்திற்கு சென்ற மற்றொரு நபர் சடலம் தொங்கியதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

 இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸார் நீதிமன்றிற்கு வருகை தந்தவுடன் தடயங்களை சேகரித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்தியதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன்சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு விசாரணைகளை  ஆரம்பித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூரப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேரின்பராஜா சபேஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X