R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் வெள்ளிக்கிழமை (08) அன்று இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பிரகலாதன் நிஷாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (08) அன்று தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர் சனிக்கிழமை(09) அன்று தீர்த்த உற்சவத்துக்கு செல்வதாகவும் அப்போது போகலாம் என தெரிவித்த நிலையில் மனமுடைந்த சிறுவன் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்
இதையடுத்து சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago