2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சட்ட, அறிவுறுகளை பின்பற்றுங்கள்’

Princiya Dixci   / 2021 ஜூலை 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சட்டத்தையும் அதன் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு, தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் வேணடுகேள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஊடக மன்றத்தில் நேற்று (20)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, இவ்வாறு நிர்வாகம் வேணடுகேள் விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சின்ன கதிர்காமம் என்று சிறப்பித்து அழைக்கப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் வருடாந்தத் திருவிழா, கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, திருவிழாக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகினது.

இதனையொட்டி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின்போதே கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,

“சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, கோவில் நிர்வாக சபையினரை உள்ளடக்கிய 50 பேருடனே திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

“எமது கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழமை. ஆனால், இவ்வாண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்கு வருகை தருவது தடைப்பட்டுள்ளது.

“எனினும், இறுதிநாள் தீர்த்தோற்சவத்தை ஊடகங்கள் வாயிலாக நேரலையாக தருவதற்கு ஏற்பாடுகளை செய்துவருவதாகவும், முருகப்பெருமானை வீட்டிலிருந்தவாறே நினைத்துக்கொண்டு வீட்டிலேயே தீர்த்தமாடுமாறு பக்தர்களை அன்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .