Janu / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண் ஒருவர் புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவர், கடந்த வியாழக்கிழமை(04) காலை தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயுவை பயன்படுத்தும் போது அதன் வயர் வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .