2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Janu   / 2025 ஜூலை 14 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த  குற்றச்சாட்டில்  இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ . டபிள்யூ  எஸ். நிசாந்த வெதகேக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 07 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 4601 சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார்  முன்னெடுத்துள்ளதுடன்  சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான இருவரையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X