R.Tharaniya / 2025 ஜூன் 08 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (08) அன்று காலையில் காணாமல் போன சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி வாவிபகுதியில் முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
காத்தான்குடி 5ம்குறிச்சி ஊர்வீதியைச் சேர்ந்த அனஸ்சுலைம்அப்துல்லாஹ் (06) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் காலையில் வீட்டை விட்டுச் சென்றஅவர்காணாமல் போயிருந்த நிலையில் பெற்றோரும் குடும்பத்தினர் அயலவர்கள் அவரை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் வாய் பேச முடியாத விசேடதேவையுடையவராகும். சடலம் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி குபாஜும்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்னாயக்காவின் தலையில் சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

எம் எஸ். எம். நூர்தீன்
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago