Editorial / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் (தராக்கி) 20 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை(29)மாலை 4.30. மணியளவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
சிவராமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,ஈகைச் சுடர் ஏற்றி,மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பா.அரியநேந்திரன் , சுதந்திர ஊடக இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் உட்பட மாவட்ட ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தராக்கி சிவராமின் சமூக நலன், தமிழ் பற்று,தமிழினத்தின் கெடுபிடிகள்,பேனா முனையின் சாதனைகள் இங்கு உணர்வுரீதியாக அதிதிகளினால் உரையாற்றபட்டது.
க.விஜயரெத்தினம்




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .