2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக செயற்படவும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இ.சுதாகரன்

 

சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்ற சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்ததாகும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில், டைபெற்ற கொவிட் - 19 தொற்று தொடர்பான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் சிறப்பான முறையில், சுகாதார முறையில் பாதுகாக்கப்படுவது மாத்திரமல்லாது, தனிமைப்படுத்தலுக்கு உட்படுகின்ற குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகளையும் அரசாங்கம் துரிதமாக வழங்கி வருகின்றன என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்புத் தரப்பினரால் மிகக் கடுமையான முறையில் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு, வீதி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றமை, மக்களுக்காகவே எனத் தெரிவித்த அவர், இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .