R.Tharaniya / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான பாரிய சூரை மீன்கள் வளையா மீன்கள் என கரை வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை(06) அன்று இவ்வாறு காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளில் சூரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த சூரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார்1300 ரூபாய் முதல்1500 வரை விற்பனையானது டன் இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக5 முதல் 6 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்முனை பிராந்திய கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



பாறுக் ஷிஹான்
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago