2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சேதனப் பசளையிட்டு செய்கை வெற்றி

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. எல்.எம்.ஷினாஸ்

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைய நச்சுத்தன்மை அற்ற உணவு உற்பத்தியை அதிகரிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேதனப் பசளை முறை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பாசிப்பயறு அறுவடை ஒலுவில் பிரதேசத்தில் இன்று (24)  இடம்பெற்றது.

நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் இடைக்கால உப உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு அமைய விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமைய இவ்வாறு பாசிப்பயறு பயிரிடப்பட்டதுடன் இதற்கு முற்றுமுழுதாக சேதனப் பசளை பயன்படுத்தப்பட்டன.

தற்போது இதன் விளைச்சல் அதிக அளவில் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் இவ்வாறான உப உணவுப் பயிர்களை மேற்கொள்வதன் ஊடாக விவசாயிகள் மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொள்வதோடு நாட்டின் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .