Freelancer / 2023 நவம்பர் 26 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கட்சியின் உப தலைவர் சங்கரப்பிள்ளை நகுலேஸ் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை(25) உத்தரவிட்டார்.
வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் நேற்றைய தினம் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மாவீரர்களின் பெற்றோர் ஒன்று கூடினர்.
இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் குறித்த காரியாலயத்துக்கு சென்று மாவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு சட்டவிரோதமானது நிகழ்வை நிறுத்துமாறு தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவை மீறி சட்டவிரோத ஓன்று கூடல் செய்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உபதலைவர் ச.நகுலேஸ் கைது செய்யப்பட்டார்.
மேலும் கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை டிசம்பர் 8ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago