Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
அரசாங்கம் ஊழலற்ற சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என கூறி இருக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அதேவேளை, தமிழ் மக்களுக்கான, அடிப்படை உரிமைகள், அரசியல் அபிலாசைகள், தமிழ் மக்களை முன்னிறுத்துவதற்கான எந்தவிதமான செயல் திட்டங்களையும் அரசாங்கம் முன் வைக்கவில்லை
என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடன் உதவி கூட்டுறவுச் சங்கத்தின் 37 வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும், குருமண் வெளியில் அமைந்துள்ள அச்சங்கத்தின் மண்டபத்தில் வியாழக்கிழமை (26) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடன் உதவி கூட்டுறவுச் சங்கம் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் கூட்டுறவு உத்தியோகத்தர்கள், கிராம பெரியோர்கள், உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது குருமண்வெளி கிராமத்தில் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் கல்வி, கலை, மற்றும், ஏனைய இதர சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எதிர்காலத்தில் அரசியல் உரிமையும், அரசியல் அபிலாசைகளும், அரசியலிலே தீர்மானிக்கும் சக்தியாக நமது மக்கள் வர இருக்கின்ற தேர்தல்களிலும் மிக மிக அவதானமாக எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி திட்டத்தின் மத்தியிலும் சரியான தீர்மானத்தை எடுப்பவர்களாக மக்கள் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழ் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் மிக உறுதியான கட்சியாக தமிழரசு கட்சியிலிருந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆகவே எனக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்த வேலையில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் அவ்வாறான உறுதியான நிலைப்பாட்டுடன் எனது மக்கள் நடந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன். இதன் மூலம் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கும் நமது மக்கள் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
மக்கள் எதிர்காலத்திலே பல துறைகளிலும் வெற்றி அடைகின்ற போது அல்லது திறமைகளைப் பெற்றுக் கொள்கின்ற போது அதில் திருப்தி அடைந்து விடக்கூடாது. இன்னும் அத்துறைகளில் மேலும் அவற்றை அவற்றை சரியாக முன் கொண்டு செல்ல வேண்டும். அதை எவ்வாறு இன்னும் மேம்படுத்த வேண்டும் போன்ற நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் இதுபோன்ற வரையறுக்கப்பட்ட சிக்கனம் மென்மேலும் வளர்ச்சி அடையும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago