2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

திருகோணமலையில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியின், அலுவலகத்திற்குள் நீதிமன்ற உத்தரவு இன்றி பொலிஸார் உட்பிரவேசித்துக் தேடுதலில் ஈடுபட்டமை சட்டத்தரணிகளின் சிறுப்புரிமையை மீறும் செயல் எனவே இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

என்று கூறி செவ்வாய்க்கிழமை (7) அன்று திருகோணமலை நீதிமன்ற தொகுதிக்கு முன்பாக மாவட்டசட்டத்தரணிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர்6 ந்தேதி காணிஉறுதிப்பத்திரம் ஒன்று தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இச்சட்டத்தரணியின் அலுவலகம் நீதிமன்ற தேடுதல் உத்தரவின்றி பொலிஸாரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது என்று கூறியும்,இதனை கண்டிப்பாதாக கூறியும் கவனயீர்ப்பு நடத்தப்பட்டது.

எஸ்.கீதபொன்கலன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .