2025 நவம்பர் 19, புதன்கிழமை

தென்.கி பல்கலைக்கழகத்தின் 8 வது மாநாடு

R.Tharaniya   / 2025 ஜூன் 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாடு சேலத்தில் உள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 வது சர்வதேச ஆய்வு மாநாடு,

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை  (16) அன்று இடம்பெற்றது.

“முன்னேற்றம் பெற்றுள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில் முனைவோர் செயல்பாடுகள், கலாசாரம், புதுமை, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலம் சமூக மாற்றமும் பொருளாதார மேம்பாடும்” (Social Transformation and EconomicUpliftment through Entrepreneurship, Culture, Innovation, and Export Promotionin the Digital Era (ICEIEDE–2025)) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளரும் இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியருமான கலாநிதி வி.ஆர் பழனிவேல் சிறப்பு உரையாற்றினார்.

இந்தியாவின் தமிழ்நாடு சேலம், காக்காபாளையம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசோசியேட் பேராசிரியர் கலாநிதி ஆர். ரமேஷ், ஆய்வரங்கு தொடர்பான அவதான உரையை ஆற்றினார்.

ஆய்வரங்கின் பிரதான உரையை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் நிகழ்த்தினார்.

அத்துடன் நன்றியுரை பேராசிரியர் கலாநிதி சல்பியா உம்மாவால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு இந்தியாவிலிருந்து கலாநிதி வி.ஆர் பழனிவேல், கலாநிதி டி. ஸ்ரீவித்யா, கலாநிதி எஸ். நந்தினி, சேலம் ஜிஹான் டிராவல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ்ணு மனோஜ், வி.பி. கவுரந்த, பி. கவினா, கே.எஸ். சௌந்தர்யா, எல். மொனிஷா, கலாநிதி ஆர். ரமேஷ், கலாநிதி கே. மணிமேகலை, எஸ்.பி. ஸ்ரீவித்யா, என்.எஸ். பிரகாஷ், தி விஜயலட்சுமி பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழினுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

நூருல் ஹுதா உமர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X