2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்கு பல்கலையில் மருத்துவ, சட்டபீடங்கள்

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் மற்றும் சட்டபீடம் என்வற்றை அமைப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவாதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவும், பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தினமும் பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்றது. 

அங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த உபவேந்தர், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
பல்கலைக்கழகத்தின் ஆரம்ப வரலாற்றில் பலரது தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் நிறைந்துள்ளன. மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப்  நினைவுகூரப்பட வேண்டியவர். அவருக்குப் பக்கபலமாக நின்றவர்களும் நலன்விரும்பிகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர், பதிவாளர், நிதியாளர், ஏனைய கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

இளமாணிப் பட்டப்படிப்புக்கள் மட்டுமன்றி, கலாநிதிக் கற்கை உள்ளடங்கலாக பல பட்டப்பின்படிப்புக் கற்கைகளும் இப்பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பல பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் எமது பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு மாணவர்களாக இணைந்துள்ளமை எமது பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே நான் பார்க்கின்றேன்.

பல்கலைக்கழக கல்வி தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு, பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களது தொழில் நிலை சார்ந்ததாக உள்ளது. 

2012 இல் எமது மாணவர்களின் தொழில் நிலை சராசரியாக 36 சதவீதமாக இருந்தது. ஆனால் 2018 இல் அது 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .