2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நடமாடும் சேவை

Freelancer   / 2023 ஜூலை 12 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குள் பிரதேச செயலக உப அலுவலகம் ஒன்றினை ஆரம்பிக்கும் நோக்கில், அந்தப் பிரதேச மக்களின் நன்மை கருதி, சுரங்கல் கிராமத்தில் நடமாடும் சேவை ஒன்று செவ்வாய்க்கிழமை(11)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதோடு, காணிப்பிரிவு, இறப்பு பிறப்பு பதிவு பிரிவு மற்றும் சமுர்த்தி சேவைகள் சமூக சேவை உட்பட அனைத்து சேவைகளும் உடனடியாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சேவையினை பெற்றுக் கொண்டனர். மஜித் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காணி உரித்தானம் இல்லாதவர்களுக்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த 67 காணி உரித்து ஆவணங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

அதேபோன்று பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரங்களும் சமுர்த்தி கொடுப்பனவுகளும் பாடசாலை மாணவர்களுக்கான "சிப்தொர" புலமை பரிசின் கீழ் புலமைப் பரிசில் பெற்ற 10 மாணவர்களுக்கான புலமை பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.

ஒலுமுதீன் கியாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .