Freelancer / 2023 ஜூலை 13 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் நடமாடும் சமூக சேவைகளும் விஷேட மருத்துவ முகாம்களும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வேலைத் திட்டத்திற்கு அமைவாக, பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள செங்காமம் கிராமத்தில் குறித்த சமூக சேவை நிகழ்வும் விஷேட மருத்துவ முகாமும் இடம்பெற்றது.

இதன்போது சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு, வெளிநோயாளர் மருத்துவ சேவை, இரத்தப் பரிசோதனை, விஷேட பல் மருத்துவ சேவை, தோற்றா நோய் தொடர்பிலான மருத்துவ ஆலோசனை சேவைகள், விஷேட தேவையுடையோருக்கான உதவிக் கொடுப்பனவு மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் போன்ற பல்வேறு சேவைகள் இடம்பெற்றன. இதன்போது பல நூற்றுக் கணக்கான பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago