2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நடமாடும் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம். ஹனீபா

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள  காலப்பகுதியில் அனுமதி பெறாமல் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில்  நடமாடும் வியாபாரிகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்படுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபா் எம்.ஏ. அப்துல் லத்தீப் நேற்றுத் (23)  தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு விற்பனையில் ஈடுபட விரும்பும்  வியாபாரிகளுக்கு அனுமதிச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையும் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக எடுக்கப்பட்டுள்ளது எனவும்,   சகல நடமாடும் வியாபாரிகளும்  சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வியாபார அனுமதி அட்டையினைப் பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிபந்தனைகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .