2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நண்பருடன் சென்றவர் சடலமாக மீட்பு

Janu   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பருடன்   மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு சாவாறு பகுதியில்   செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

கல்முனை - பாண்டிருப்பு செல்லப்பா வீதி  பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றி வேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த   திங்கட்கிழமை (31) மாலை தனது நண்பருடன்  மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.  தனது கணவரைக் காணவில்லை என மனைவி , பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுக்கமைய காணாமல் போனவரின்  நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் செவ்வாய்க்கிழமை (01) அன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X