Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக உதயகுமாரன் குமணன் நியமிக்கப்படுள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் கணக்கியல் முகாமைத்துவத்தை பூர்த்தி செய்து ஆரம்பப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவர், திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கத்து.
கோமரங்கடவெல உதவி பிரதேச செயலாளராக எஸ். கமல்ராஜ் நியமிக்கப்படுள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பப் பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago