2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிறக்குறியீடு இல்லாத பானங்கள் சிக்கின

Editorial   / 2025 மார்ச் 07 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் வெள்ளிக்கிழமை (07) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின் தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் பல்நோக்கு  அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும், நிறக்குறியீடு இல்லாத பானங்களும் கைப்பற்றப்பட்டது. அத்துடன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் களும் செய்ய  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே பொதுமக்கள் உங்கள் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களுக்கு அறியத்தாருங்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X