2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ப.கூ.ச ஊடாக பால்மா விநியோகம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவுச் சங்கங்களினூடாக பால்மாவினை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இது தொடர்பில்  இன்று (24) அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

கூட்டுறவு சேவையில் உணவு வழங்கலும் விநியோகமும் அத்தியாவசிய சேவையாக இருப்பதால், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோக நடவடிக்கையினை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக மேற்கொண்டு வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவிலும் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினூடாக நேற்று முதல் (24) பழைய விலையில் பால்மா விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேற்கொண்ட முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினூடாக பொதுமக்களுக்கு விநியோகிக்கவென இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான பால்மா கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர்மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .