2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

புதிய நிதி உதவியாளராக திருமதி அமான் நியமனம்

Mayu   / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிதி உதவியாளராக, மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் முதலாம் வகுப்புச் சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி எஸ். எம். எப். அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம் நேற்று (20) வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் ரீ. லிங்கேஸ்வரனும் கலந்து கொண்டார்.

நியமனத்தைத் தொடர்ந்து, நிதி உதவியாளர் பதவிக்கான கடமைப் பொறுப்புகளை ஏற்கும் நிகழ்வு, கணக்காளர் ரீ. லிங்கேஸ்வரன் தலைமையில் நிதிப் பிரிவில் நடைபெற்றது.

அதேவேளை, கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதிப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக, மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1-ஐச் சேர்ந்த திரு. ஜெயகிருஷ்ணா நியமிக்கப்பட்டுத் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் நிதிப் பிரிவின் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .