Janu / 2026 ஜனவரி 29 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி, இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அரிய மனிதர்களில் ஒருவரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம் தனது 83 வயதில் புதன்கிழமை (28) அன்று சிவபதம் அடைந்தார் .
அன்னாரின் இலக்கிய சேவையை பாராட்டி கலாபூஷணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் விருதும் வழங்கப்பட்டது.
களுதாவளையில் 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே அறிவாற்றல், ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகிய பண்புகளை வளர்த்துக் கொண்டவராவார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்பு பட்டத்தைப்பெற்றதுடன் செல்லம்மா ராஜகோபால் விருதையும் பெற்றது அவரது தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துகிறது.
கல்வி, இலக்கியம், சமூக சேவை என மூன்றையும் ஒருங்கிணைத்த அரசரத்தினம் அவர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்குத் தன்னம்பிக்கையும் பண்பாடும் கற்பிக்கும் ஒரு வாழும் பாடமாக உள்ளது.
வியாழக்கிழமையன்று மாலை நீண்ட அஞ்சலி உரைகளோடு அவரது இறுதிச் சடங்கு களுதாவளை மயானத்தில் நடைபெற்றுள்ளது.
வி.ரி. சகாதேவராஜா


3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago