2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய பிரதம செயலாளருடன் அறிமுக கலந்துரையாடல்

Simrith   / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடனான கலந்துரையாடல் (07) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் தலைவர்களும் பொது நிதியை முறையாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நிறுவன மட்டத்தில் உற்பத்தித்திறன் உயர்வாக செயல்படுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என பிரதம செயலாளர் மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இதன்போது தெரிவித்தார்.

மேலும், பொது நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை விரைவாகப் பயன்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X