2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பு பகுதியில் யானைகளின் அட்டகாசம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் யானைகளின் அட்டகாசம்! மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேசங்களில் ஒன்றானபுதுக்குடியிருப்பு அமலபுரம் பிரதேசத்தில் இரவு வேளையில் மக்கள் குடியிருப்புகள் உள்நுழைந்த காட்டுயானைகள் வேலிகளை சேதப்படுத்தி பயன்தரும் வாழை மரம் விவசாய நிலங்கள் கரும்பு தோட்டங்களை சேதப்படுத்துகின்றன.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தாம்பயத்தின் மத்தியிலேயே வாழ்வாதாரத்தை கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலங்களில் குடியிருப்புகள் வயல்வெளிகளுக்குள் காட்டு யானைகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் அதைதடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அத்துடன் காட்டுயானையின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் சனிக்கிழமை (12) அன்று இரவு திசைமாறி மண்டூர் பகுதியில் இருந்து வெல்லாவெளி ஊடாக கடந்து புதுக் குடியிருப்பு பகுதிக்குள் நான்கு காட்டுயானைகளும் ஊடுருவியிருக்கலாம் எனமக்கள்தெரிவிக்கின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிடயத்தில் உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X