Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில், ‘எல்மிஸ் வல்கம’ வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை, அதே ‘புன்னைக்குடா வீதி’ என்ற பழைய பெயரோடு மீள நடப்பட்டது.
இந்நிகழ்வு, கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் திங்கள்கிழமை (10) அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் உட்பட ஊர்ப் பிரமுகர்களும் சமூக நல விரும்பிகளும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல, இலங்கையில் எப்பாகத்திலும் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி, அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து, இனமுரண்பாடுகளை உருவாக்கும் போக்கை நிறுத்த வேண்டும் என்றார்.
ஏறாவூர் - புன்னைக்குடா வீதி, தொன்று தொட்டு புழக்கத்தில் இருந்து வரும் பெயராகும். காலி நகரைச் சேர்ந்த சிங்கள சமூகத்தவரான ‘எல்மிஸ் வல்கம’ வீதி என மாற்றுவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கடந்த மாத இறுதியில் உத்தரவிட்டிருந்ததும் ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் இருந்த ‘புன்னைக்குடா வீதி’ என்ற பெயர்ப்பலகை உடனடியாக அகற்றப்பட்டது. இவ்வாறு, அகற்றப்பட்ட பெயர்பலகையே, மீண்டும் அதே இடத்தில் புன்னைக்குடா வீதி என எழுதிய பாரம்பரிய பெயர்ப்பலகை, அமைச்சர் நஸீர் அஹமட் நாட்டப்பட்டது.
ஏ.எச்.ஏ ஹுஸைன்
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025