2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையினை நீக்கவேண்டும்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பாக இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையினை ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று  (25) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்துவிட்டு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதானது ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாகவே உள்ளது.

இதனை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஜனாதிபதி அவர்கள் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதித்துள்ள தடைகளை நீக்குவதன் ஊடாக அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு செயல்வடிங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும். தமிழர்களைப்பொறுத்தவரையில் இறுதி இனப்படுகொலைநடைபெற்ற காலப்பகுதியில் தற்போதுள்ள ஜனாதிபதியே பல அதிகாரங்களை கொண்டிருந்தார்.இவ்வாறான ஒருவர் தொடர்ச்சியாக உள்ளகப்பொறிமுறைதான் அமுலுக்கு வரவேண்டும் என்று சொல்வதை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள்”என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .