2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையம் சென்ற மூவருக்குக் கொரோனா

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் உட்பட அங்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வருகை தந்திருந்த பொது மக்கள் உட்பட 100 பேருக்கு நேற்றைய தினம் (23) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொதுமக்கள் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

அதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கல்முனை, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் தேவையின்றி வீதிகளில் நடமாடுவோர் சுற்றிவளைக்கப்பட்டு, அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் சிலர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .