Janu / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து மஹரகம நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பணம் கொடுக்காமல் பிரயாணித்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் புதன்கிழமை (03) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து மஹரகம நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணித்த ஒருவரிடம் நடத்துனர் பேருந்து கட்டணத்தை கேட்டபோது தான் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனவும் பஸ் கட்டணத்தை தர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பேருந்து மஹரகம சென்று நிறுத்தப்பட்டதும் அவர் அதில் இருந்து இறங்கிய போது, பேருந்து நடத்துனர் அவரை பின் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைவதை கண்டு அங்கு சென்று பார்த்த போது பொலிஸ் நிலையத்தில் வேறு பொறுப்பதிகாரி ஒருவர் சீருடையில் இருப்பதை கண்டு நடத்துனர் திகைப்படைந்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்ததை தெரிவித்ததையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி என போலியாக செயல்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த காலத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளமை மற்றும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து போலியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கனகராசா சரவணன்
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago