R.Tharaniya / 2025 நவம்பர் 06 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் புதன்கிழமை (5) அன்று போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டனர்
இதன் போது போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்த பொலிஸார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சோதனை நடவடிக்கையானது
கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலின் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025