2025 ஜூலை 03, வியாழக்கிழமை

’மட்டக்களப்பில் 88%னோருக்கு டெல்டா’

Niroshini   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம் எஸ் எம் நூர்தீன், வா. கிருஸ்ணா

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, வவுணதீவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

அத்துடன், 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸும் 4 பேருக்கு அல்பா வைரஸும் கண்டறிப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 88 சதவீதமானவர்களுக்கு டெல்டா வேரியன் வைரஸ் இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், அவர் கூறினார்.

மட்க்களப்பு சுகாதாரப் பிராந்திய சேவைகள் பணிமனையில், இன்று (09)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்துக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 49 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன எனவும் அதில் 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸும், 4 பேருக்கு அல்பா வைரஸும் கண்டறியப்பட்டுள்ளதாக, புதன்கிழமை (08) அறிவித்துள்ளனர் எனவும், அந்த 49 மாதிரிகளில் 2 மாதிரிகளின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .